Tuesday 1 April 2008

அனைத்துக்கும் ஆசைப்படு


பிறக்கும் குழந்தைகள் அழுதாலும் அழகு
கவலை இல்லை அவர்களுக்கு
அரவணைக்க பெற்றோர்களும் மற்றும் சொந்தங்களும்
தேவை இல்லை மற்ற யோசனைகள்
வருடங்கள் கடந்த பிறகு
சின்னஞ்சிறு சுமைகள்
பள்ளிகூட பாடங்கள், போட்டி பொறாமைகள்,
ஆசை பிறக்கிறது இந்த பருவத்தில்
அறியாத வயதில் எண்ணற்ற ஆசைகள்
வானில் பரக்க வேண்டும்
நிலாவில் படுக்க வேண்டும்
சூரியனை பந்தாட வேண்டும்
நட்சத்திரத்தில் கோலமிட வேண்டும்
யாருக்கு தெரியும் இந்த ஆசைகள்
வெறும் கணவாய் முடியுமா இல்லை
உண்மையாக்க படுமா என்று

வாலிப வயசின் பார்வையில்
ஆசைகள் சற்று குறையும்
ஆனால் ஆழமோ அதிகரிக்கும்
பச்சை மரத்து ஆணிபோல்
தோன்றும் ஆசைகள் நிச்சயம்
அடையவேண்டும் ஒரு நாளில் என்று
ஆரம்பம் இன்னல்களும் குழபங்களும்
எது தேவையானது என்று
மனது தீர்மானிக்கிறது
அநேகமாக தவறான வற்றை
தேர்வு செய்கிறது, தனியே சிந்திபதால்
சான்றோர்களின் கண்காணிப்பில்
தப்பித்துவிடுகிறார்கள் சிலபேர்
அனைத்துக்கும் ஆசை படலாம்
ஆனால் அடைய நினைப்பது தவறு

இலக்கை நிர்ணயத்தபின், முழு ஈடுபாட்டில்
தேவை என்கின்றன விஷியத்தை நோக்கி
பாடுபட்டு வென்றிட, ஆசை மனிதர்களுக்கு
இழக்கலாம் பிறரை இதனால் கொஞ்சம்
முடிவு செய்வது இவர்களே
அதனால் பாதிப்பில்லை மனதிற்கு
வெற்றி என்ற பயணத்தில்
மேடு பள்ளங்கள் இருந்தாலும்
இறுதில் வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை
இருக்க வேண்டும் அவரவர் உள்ளத்தில்
நட்பு, காதல் மற்றும் நம்பிக்கை
இவைபோன்ற வெற்றிகளின் சொந்தங்கள்
எந்நேரத்திலும் அருகிலே இருக்க
ஆள் மனதில் இது வேண்டும் என்று ஆசை
இது இல்லாமல் வாழ்கை இல்லை என்ற தீர்மானம்
கடின உழைப்பு, மற்றும் அதன் பாதிப்பு
தக்க ஆதரவோடு நேர் வழியில் பயணம்
வென்றிடலாம் எதையும் இவ்வுலகில் அதனாலே
அனைத்துக்கும் ஆசை படு என் செல்ல மனமே

No comments: