Saturday 16 August 2008

பெற்றோர்களே நடமாடும் தெய்வங்கள் !

என்னிடம் இருந்த ஒரு இதயத்தையும் பறித்துக் கொண்டது காதல்!
எனக்காக ஒரு இதயத்தையே பரிசளித்தது நட்பு!
கஷ்டங்களில் யோசித்தது காதல்!
யோசிக்காமல் கைகொடுத்தது நட்பு!
துயரங்களை நோக்கி இழுத்துச்சென்றது காதல்!
உயரங்ளை நோக்கி அழைத்துச் சென்றது நட்பு!
கட்டுப்பாடுகளை தளர்த்த முயற்சித்தது காதல்!
கடமைகளை உணர்த்த முயற்சித்தது நட்பு!
என் இலட்சியங்களை கனவாக்கியது காதல்!
என் கனவுகளை இலட்சியமாக்கியது நட்பு!

காயம் தரும் காதல் வேண்டாம்!
நன்மை தரும் நட்பு மட்டும் போதும்
என்று யோசித்துக்கொண்டிருந்த வேளையில்
காதல் தொலைந்து காதலியும் மறைந்தாள்
நட்ப்பை மறந்து நண்பனும் வெகு தூரமாய் ஒதுங்கி விட்டான்
உடன் பிறப்புகளும் இரத்த சொந்தங்களும்
ஈன்றெடுத்த அன்னையும் ஞானம் கொடுத்த தந்தையும்
வியக்கவைக்கும் இவ்வுலகில் இல்லையெனில்
எனக்கென்ற வாழ்வும் எனக்குள் இருக்கும் மூச்சும்
தேவை இல்லாத விஷியங்களாக உருவெடுத்து
இயற்கையுடன் ஒன்றுடுன் ஒன்றாய் கலந்து
உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு உயிரை இழந்த
ஒரு மாமிச பிண்டமாய் பிறராலும் சுட்டிக்காட்ட பட்டிருப்பேன்
தாய் தந்தை செய்த புண்ணியம்
என்னை கை கொடுத்து காத்தது
அவர்களுக்கு என் பணிவும் அன்பும் கலந்த
மரியாதையுடைய வணக்கங்கள்
அவர்களுக்கு பாத பூஜை செய்வதை விட
இவ்வுலகில் சிறந்த செயல் இன்னும்
என் கண்களுக்கு தெரியவில்லை !!!

No comments: